முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்.எல்.சி. விபத்தில் உயிரிழப்பு: மத்திய அரசு நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி கோரிக்கை

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

என்.எல்.சி. விபத்தில் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. 2வது அனல் மின் நிலையத்தில் உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியானார்கள். 17 பேர் காயமடைந்தனர்.  இதனைத் தொடர்ந்து இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவியும் அளிப்பதாக அறிவித்தார். மேலும், விபத்தில் படு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. ஒரு லட்சமும், குறைவாக காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அதோடு, காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் என்.எல்.சி. விபத்தில் 7 பேர் உயிரிழந்த விவகாரத்தில், மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னை தொடர்பு கொண்டு என்.எல்.சி விபத்து பற்றி விசாரித்த போது, நான் மாநில அரசு சார்பாக செய்ய வேண்டிய உதவிகளை செய்து வருகிறோம் என்று கூறினேன். மேலும், விபத்தில் இறந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் மத்திய அரசு சார்பில் தேவையான நிதியுதவியை வழங்கிட கோரிக்கை வைத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து