முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தொழில் நிறுவனத்திற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் செப்டம்பர் வரை நீட்டிப்பு

வியாழக்கிழமை, 2 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் செப்டம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு அரசு மாநிலம் தழுவிய ஊரடங்கினை அறிவித்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் எடுத்து வருகின்றது.  அந்த வகையில் கடந்த 01.04.2020 அன்று முதல்வரின் ஆணைக்கிணங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981ன் படி 31.03.2020 வரை செல்லத்தக்கபடி வழங்கப்பட்ட இசைவாணைகள் மற்றும் கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் 31.03.2020 வரை செல்லத்தக்கபடி வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் ஆகியவற்றை மேலும் மூன்று மாதங்கள் அதாவது 30.06.2020 வரை செல்லத்தக்கபடி, நீட்டிப்பு செய்து வழங்கியது. 

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்கப்படும் நிலையில் உள்ளது. எனினும் ஊரடங்கு முழுமையாக தளர்த்தப்படாத நிலையில் உள்ளது.  இதனைக் கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 - ஆகியவற்றின் படி வழங்கப்பட்ட இசைவாணைகள் மற்றும் கழிவுகள் மேலாண்மை விதிகளின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரங்கள் ஆகியவற்றை 30.06.2020 வரை செல்லத்தக்கபடி ஏற்கெனவே நீட்டிப்பு செய்து வழங்கியதை தற்போது, முதல்வரின் ஆணைக்கிணங்க சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் உத்தரவின்படி, மேலும் மூன்று மாத காலங்கள் அதாவது செப்டம்பர் 30,  2020 வரை செல்லத்தக்கபடி நீட்டித்து வழங்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து