முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பரவலை தடுப்பதில் முக கவசம் உயிர்க்கவசமாக மாறியுள்ளது: அதிபர் டிரம்ப்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுத்து உயிரை காப்பாற்றிக் கொள்வதில் முக கவசம், உயிர் கவசமாக மாறி இருக்கிறது என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

உலகமெங்கும் ஒரு கோடியே 7 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க முக கவசம் அணிவது கட்டாயம் என பல நாடுகள் அறிவித்துள்ளன. ஆனால் அதிபர் டிரம்ப் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மையம் அனைவரும் கொரோனாவில் இருந்து தங்களை காத்துக் கொள்ள முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்த போதுகூட, நான் அதைச் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்தார். அவரது கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் முக கவசம் அணிவதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில் டிரம்ப் முக கவசம் அணியாதது எதிர்க்கட்சியில் மட்டுமின்றி ஆளுங்கட்சியிலும் விமர்சனத்துக்கு வழிவகுத்தது.

இந்த நிலையில் ஒரு வழியாக முக கவசத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார் அதிபர் டிரம்ப்.  பாக்ஸ் நியூசுக்கு பேட்டி அளித்த அதிபர் கூறுகையில், அனைவரும் அவசியம் முக கவசம் அணிய வேண்டும். இதற்கு நான் ஆதரவானவன் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது நீங்கள் முக கவசம் அணிவீர்களா? என்று கேட்டதற்கு நான் அப்படி மக்களோடு ஒரு நெருக்கடியான தருணத்தில் இருந்தால், நிச்சயமாக அணிவேன். பொதுவெளியில் முக கவசம் அணிவதில் எனக்கு பிரச்சினை இல்லை. நான் ஒரு முறை முக கவசம் அணிந்ததை மக்கள் பார்த்திருக்கிறார்கள் என்று டிரம்ப் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து