முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துரைசாமி மற்றும் நடிகை நமீதா உள்பட 10 பேருக்கு பா.ஜ.க,வில் புதிய பதவிகள்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தி.மு.க.வில் இருந்து பாரதீய ஜனதாவுக்கு மாறிய துரைசாமி மற்றும் நடிகை நமீதா உள்பட 10 பேருக்கு பா.ஜ.க.வில் புதிய பதவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

தமிழக பா.ஜ.க.வின் மாநில தலைவர் முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

துரைசாமி உள்ளிட்ட பத்து நபர்கள் கட்சியின் புதிய துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.  துரைசாமியுடன், முன்னர் பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசன் மற்றும் நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி ஆகியோரும் மாநில துணை தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன் மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்சிப் பதவிகளுக்கான காலமான மூன்று ஆண்டுகளை பதவியில் இருந்தவர்கள் நிறைவு செய்து விட்டதால் புதிய உறுப்பினர்கள் பொறுப்பேற்றுள்ளதாக பா.ஜ.க.வின் மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

மேலும், பா.ஜ.க.வின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக நடிகை நமீதா நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து