முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரபல பாலிவுட் டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார் : அமைச்சர்கள், நடிகர்–நடிகைகள் இரங்கல்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      சினிமா
Image Unavailable

Source: provided

மும்பை : இந்தி சினிமா பிரபல டான்ஸ் டைரக்டர் சரோஜ் கான் காலமானார்

இந்தி சினிமா பிரபல பெண் நடன இயக்குநர் சரோஜ்கான் திடீர் மாரடைப்பு காரணமாக நள்ளிரவு 2.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 71.  இந்தி சினிமாவில் இன்னும் மறக்கவே முடியாத பாடல்களாக இருக்கும் ‘ஏக் தோ தீன்’, ‘தாக் தாக்’, ‘ஹவா ஹவா’, ‘தம்மா தம்மா’ போன்ற பிரபல பாடல்களுக்கு நடன இயக்குநராக இருந்தவர் சரோஜ்கான். பிரபல நடிகைகள் மாதுரி தீட்சித், மறைந்த ஸ்ரீதேவியின் பெரும்பாலான படங்களுக்கு ஆஸ்தான நடன இயக்குநராக சரோஜ் கான் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை தேசிய விருதுகளை வென்ற சரோஜ் கான், கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். மும்பையில் பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் இறுதி வாரம் சரோஜ் கான் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் கொரோனா இல்லை எனத் தெரியவந்தது.

இதனால் சுவாசக் கோளாறுக்கான சிகிச்சை மட்டும் சரோஜ் கானுக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு 2.30 மணி அளவில் ஏற்பட்ட திடீர் மரடைப்பால் சரோஜ் கான் உயிரிழந்தார். சரோஜ் கானுக்கு ராஜு கான் என்ற மகனும், சுகையான கான் என்ற மகளும் உள்ளனர். சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் நேற்று நடைபெற்றது. 

சரோஜ் கான் மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜீதேந்திர சிங், மகாராஷ்ட்ர அமைச்சர்கள் அனில்தேஷ்முக், பிரகாஷ் ஜாவேத்கர், நடிகைகள் மாதுரி தீட்சித், நடிகர் அஷ்யகுமார், டைரக்டர் ரெமோ டிசவுசா, ரித்தீஷ் தேஷ்முக் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தி நடிகர் –நடிகைகள் பலர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து