முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5,39,000 தனிநபர் பாதுகாப்பு கவசம் : தமிழகத்திற்கு இலவச விநியோகம்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : தமிழகத்திற்கு 5 லட்சத்து 39 ஆயிரம் பி.பி.இ.க்கள், 9 லட்சத்து 81 ஆயிரம் என் 95 மாஸ்க்குகள் (முகக்கவசம்) இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 2 கோடியே 2 லட்சம் என் 95 மாஸ்க்குகள், 1 கோடியே 18 லட்சம் தனிநபர் பாதுகாப்பு கவசம் (பி.பி.இ) ஆகியவை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும், 6 கோடியே 12 லட்சம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை, மேட் இன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 11,300 வென்டிலேட்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. 

இதில், டெல்லிக்கு, 7 லட்சத்து 81 ஆயிரம் பி.பி.இ.க்கள், 12 லட்சத்து 76 ஆயிரம் என்95 மாஸ்க்குகள், மகராஷ்டிராவிற்கு 11.78 லட்சம் பி.பி.இ.க்கள். 20 லட்சத்து 64 ஆயிரம் என் 95 மாஸ்க்குகள், தமிழகத்திற்கு 5 லட்சத்து 39 ஆயிரம் பி.பி.இ.க்கள், 9 லட்சத்து 81 ஆயிரம் என்95 மாஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல ஒரு லட்சத்து 2 ஆயிரம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பல்வேறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் 72,293 சிலிண்டர்கள்– ஆக்சிஜன் படுக்கைகளை வலுப்படுத்தும் விதத்தில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து