முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்கள் மாற்றியமைப்பு : இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டலங்களை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர். 

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள 4 மண்டலங்கள் சென்னை, வேலூர், கோவை, திருச்சி, மதுரை என 5 மண்டலங்களாக மாற்றி அமைக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலமும் பின்வரும் மாவட்டங்களை உள்ளடக்கி செயல்படும். 

சென்னை மண்டலத்தில் வட சென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டம், வட சென்னை வடக்கு(மேற்கு) மாவட்டம், வட சென்னை தெற்கு  மாவட்டம், தென்சென்னை வடக்கு மாவட்டம், தென் சென்னை தெற்கு மாவட்டம், வேலூர் மண்டலத்தில் வேலூர் கிழக்கு மாவட்டம், வேலூர் மேற்கு மாவட்டம், திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், விழுப்புரம் வடக்கு மாவட்டம், விழுப்புரம் தெற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தருமபுரி மாவட்டம், கோவை மண்டலத்தில் கோவை மாநகர் மாவட்டம், கோவை புறநகர் மாவட்டம், திருப்பூர் மாநகர் மாவட்டம், திருப்பூர் புறநகர் மாவட்டம், ஈரோடு மாநகர் மாவட்டம், ஈரோடு புறநகர் மாவட்டம், நீலகிரி மாவட்டம், தேனி மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், காஞ்சிபுரம் மத்திய மாவட்டம், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், திருவள்ளூர் மேற்கு மாவட்டம், கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் மத்திய மாவட்டம், கடலூர் மேற்கு மாவட்டம், திருச்சி மண்டலத்தில் திருச்சி மாநகர் மாவட்டம், திருச்சி புறநகர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், மதுரை மண்டலத்தில் சேலம் மாநகர் மாவட்டம், சேலம் புறநகர் மாவட்டம், நாமக்கல் மாவட்டம், கரூர் மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், விருதுநகர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம், ராமநாதபுரம் மாவட்டம், திருநெல்வேலி மாநகர் மாவட்டம், திருநெல்வேலி புறநகர் மாவட்டம், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம். 

இவைகளின் அடிப்படையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் மண்டலங்களுக்கு இன்று(நேற்று) முதல் நியமிக்கப்படுகிறார்கள். 

சென்னை மண்டலத்தில் தியாகராயர் நகர் தென்சென்னை, வடக்கு மாவட்டம் அஸ்பயர் கே. சுவாமிநாதன், வேலூர் மண்டலத்தில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் எம். கோவை சத்யன், கோவை மண்டலத்தில் கோவை மாநகர் மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி சிங்கை ஜி. ராமசந்திரன், திருச்சி மண்டலத்தில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் பி. வினுபாலன், மதுரை மண்டலத்தில் மதுரை பழைய விளாச்சேரி சாலை வி.வி.ஆர்.ராஜ்சத்யன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்காணும் மண்டலங்களுக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.

கட்சி அமைப்பு ரீதியாக தற்போது பிரிக்கப்பட்டுள்ள  மண்டலங்களுக்கு உட்பட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும் சம்பந்தப்பட்ட மண்டல செயலாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கட்சி பணிகளை ஆற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து