முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை : பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தீவிரம்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பாதுகாக்கின்ற வகையில் வங்கி தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் வங்கி பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபவர்கள் அனைத்து வங்கி கிளை ஊழியர்கள் ஆகியோருக்கு முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகளை மற்றும் கபசுர குடிநீர், சானிடேஷன் ஆகியவற்றை வங்கி பெருந்தலைவர் எம்.எஸ். பாண்டியன் வழங்கினார்.

அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியில் மாநகராட்சி சார்பில் விற்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய மருந்து பெட்டகத்தை வங்கி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் ஆகியோருக்கு வங்கி பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன் வழங்கினார். அதன் பின்னர் வாடிக்கையாளர்களை பாதுகாக்கின்ற நடவடிக்கையாக வங்கிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் பயன்படைகிற வகையில் வங்கியின் நுழைவு வாயிலில் தானியங்கி கைத்தெளிப்பான் எந்திரத்தை பொருத்த வங்கி பெருந்தலைவர் எம் எஸ் பாண்டியன் தொடர் நடவடிக்கை எடுத்தார். 

மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முதல் அனைத்து கிளை கிளை அலுவலகங்கள் உள்ளிட்ட மொத்தம் 300 பணியாளர்களுக்கு இதுவரை இந்த மருந்து பெட்டகம், கபசுரக் குடிநீர், வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரை, சானிடைசர், முக கவசம் உள்ளிட்டவற்றை வங்கி பெருந்தலைவர் எம்.எஸ். பாண்டியன் வழங்கி அவர்களுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வருகிறார். 

குறிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து பேசவும், வங்கி ஊழியர்கள் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்றவும், முக கவசம் கண்டிப்பாக அணியவும்,ஒ ரு மணி நேரத்திற்கு ஒரு முறை சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தவும், அதே போல் தமிழக அரசு அறிவித்து இருக்கின்ற வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுரக் குடிநீர் ஆகியவற்றை தொடர்ச்சியாக அருந்தவும், சத்துள்ள உணவுகளை உட்கொள்ளவும் வங்கி பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன் தகுந்த ஆலோசனைகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறார்

கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையில் வங்கிப் பணியாளர்கள் நலனில் அக்கறை காட்டிய வங்கி பெருந்தலைவர் எம்.எஸ். பாண்டியன் இரண்டு முறை தலைமை அலுவலகம் மற்றும் கடைகளில் பணிபுரியும் வங்கி அலுவலர்கள் முதல் அடிப்படை பணியாளர்கள் என்று அனைவருக்கும் முகக் கவசம் கிருமிநாசினி கபசுர குடிநீர் பொடி, ஆடாதொடை, மணப்பாகு தாளிசாதி சூரணம் மாத்திரை ஆர்சனிக் ஆல்பம் வைட்டமின் மாத்திரை ஜிங்க் மாத்திரை உள்ளிட்ட சித்தா ஹோமியோபதி அலோபதி மருத்துவ முறைகளான மருந்துகள் அடங்கிய தொகுப்பினை வங்கி மேலாண்மை இயக்குனர் ஜீவா, பொது மேலாளர் வி. சுந்தரேஸ்வரன்,  உதவி பொது மேலாளர் ஆகியோரது முன்னிலையில் வங்கி பெருந்தலைவர் எம் எஸ் பாண்டியன் வழங்கினார்  

மேலும் கொரோனா வைரசில் இருந்து வங்கி பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு வங்கி தலைமை அலுவலகம் மற்றும் கிளைகளில் தினசரி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் முதன்முறையாக மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலத்தில் தானியங்கி கிருமிநாசினி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

வங்கிக்கு வருகை தரும் வாடிக்கையாளர்கள் பணியாளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது. தொடர்ந்து வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வங்கி பெருந்தலைவர் எம்.எஸ்.பாண்டியன் எடுத்து வருகிறார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து