முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்.13-ம் தேதிக்கு நீட் தேர்வு : மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மருத்துவப் படிப்புக்கான, நீட் நுழைவுத் தேர்வு ஜூலை மாதம் 26-ம் தேதி நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால்,நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேர்வு தேதிகளை ஒத்தி வைக்க வேண்டும் என மாணவர்களும், அவர்களது பெற்றோரும் வலியுறுத்தி வந்தனர். 

கொரோனா பரவல் தற்போது வரை குறையாத நிலையில், நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என பல தரப்பிலிருந்தும் கோரிக்கை வந்தது. இதையடுத்து, தேர்வுகளை நடத்துவதற்கான நிலைமையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.

இந்த குழு தனது அறிக்கையை சமர்பித்துள்ளதையடுத்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி நடைபெறும் . ஜே.இ.இ. முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் துவங்கி செப்டம்பர் மாதம் 6-ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து