முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் கழுத்தில் கத்தியை வைத்து பாக். வீரர் யூனிஸ் மிரட்டினார் : முன்னாள் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சி தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தானின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றிய ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிராண்ட் பிளவர் தனது  பயிற்சி அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கானுக்கு ஒருமுறை சில ஆலோசனைகளை வழங்க முயன்றேன். அப்போது அவர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் என கூறி உள்ளார்.  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி) சமீபத்தில் முன்னாள் அணியின் கேப்டன் யூனிஸ் கானை தேசிய அணியின் பேட்டிங் பயிற்சியாளராகவும், முஷ்தாக் அகமதுவை ஸ்பின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு நியமிப்பதாக அறிவித்து உள்ளது. 

யூனுஸ்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தானுக்காக 10000 ரன்களுக்கு மேல் அடித்து உள்ளார். ஐ.சி.சி தரவரிசையில் சிறந்த பேட்ஸ்மேனாக தொடர்ந்தார். அவர் 2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கு அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து