முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டுமான திட்டங்களில் சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கட்டுமான திட்டங்களில், சீன நிறுவனங்களுக்கு உதவும் விதிகள் காலாவதியானவை. தேச நலனுக்காகவும், இந்திய நிறுவனங்களை பாதுகாக்கவும், அவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

கட்டுமான திட்டங்களில் நமது விதிமுறைகள் காலாவதியாகி விட்டன. அவை, ஒப்பந்ததாரர்களுக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கின்றன. பெரிய நெடுஞ்சாலைகள் மற்றும் பாலங்கள் போன்றவற்றை கட்டமைப்பதற்கு, அனுபவமுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என நம்முடைய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

ஆனால், அதுபோன்ற பணிகளை, நமது நாட்டில் யாரும் செய்ததில்லை. இதனால், அந்த ஒப்பந்தங்கள் இந்திய நிறுவனங்களுக்கு கிடைப்பது இல்லை. இதனால், நமது விதிமுறைகள் தவறானவை என நான் கூறியுள்ளேன்.

இந்திய ஒப்பந்ததாரர்களுக்கு திறமை உள்ள போதிலும், அவர்கள் நிதி மற்றும் தொழில்நுட்ப தகுதிகள் காரணமாக கூட்டு நிறுவனங்களில் நுழைய வேண்டியிருந்தது. தற்போதைய சூழ்நிலையை பொறுத்தவரை, சீன நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட வேண்டிய அவசியமில்லை. அதேபோல், சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்குவதும் சரியானதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து