முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை : ஐ.சி.எம்.ஆர். விளக்கம்

சனிக்கிழமை, 4 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : சர்வதேச விதிமுறைகளுக்குட்பட்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நடத்தப்படுவதாக ஐ.சி.எம்.ஆர். விளக்கம் அளித்துள்ளது. 

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கொரோனா தடுப்பு மருந்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு விலங்குகள், மனிதர்களிடம் பரிசோதனை நடத்த இந்திய மருத்துவ கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து ஐ.சி.எம்.ஆர். வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உலகின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் பரிசோதனைகள் வெவ்வேறு நிலைகளில் உள்ளன. கொரோனா தொற்றுக்கு விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதை விட அதன் பாதுகாப்பை உறுதி செய்வது, மருந்தின் தரம், தடுப்பு மருந்துக்கான அனைத்தும் தடுப்பு மருந்தில் இருப்பதில் உறுதி செய்வது போன்றவையும் மிக முக்கியம். விஸ்வரூபம் எடுத்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுக்க இதற்கான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்க மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. பல்வேறு நிறுவனங்கள் ஆய்வுகளை மேற்கொண்டது.

இதில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் இந்தியா நிறுவனத்துடன் ஐ.சி.எம்.ஆர். தேசிய நுண்மியியல் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை வெற்றிகரமாக உருவாக்கியது. இந்த தடுப்பு மருந்துக்கு கோவேக்ஸின் என பெயரிடப்பட்டுள்ளது. இதை ஆராய்ந்த மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் மனிதர்களுக்கான மருத்துவ சோதனைகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி நாடு முழுக்க 12 மருத்துவமனைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை மருத்துவ சோதனை தளமாக தேர்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்க மிக அவசரம் காட்டி வரும் நிலையில் ஐ.சி.எம்.ஆர். சர்வதேச விதிகளுக்குட்பட்டே கொரோனா தொற்று நோய் தடுப்பு மருந்து பரிசோதனைகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. ஆய்வக சோதனை வெற்றிகரமாக முடிந்திருக்கும் நிலையில் இரண்டாம் கட்ட மற்றும் மனிதர்களுக்கு மருந்தை உள்செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.

இதில் சிவப்பு நாடா முறையை ஒழித்து விட்டு மிக முக்கியமாக செய்ய வேண்டிய நடைமுறைகள் எதையும் தவிர்த்து விடாமல் பரிசோதனையில் பங்கேற்கும் நபர்களை தேர்வு செய்வதை விரைந்து  நடத்த ஐ.சி.எம்.ஆர். அறிவுறுத்தி உள்ளது என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. மேலும் ஐ.சி.எம்.ஆர். மற்ற எதையும் விட கொரோனா சிகிச்சையில் பாதுகாப்பு, இந்திய மக்களின் நலன் ஆகியவைதான் அதிக முக்கியத்துவம் தரும் விஷயங்களாக எடுத்து கொண்டுள்ளதாகவும் அந்த விளக்கத்தில் கூறியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து