முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் என்ற செயலியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

உலகத்தரம் வாய்ந்த இந்திய செயலிகளை உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி இந்திய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட எலிமெண்ட்ஸ் சூப்பர் ஆப் என்ற செயலியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று காணொலி காட்சியில் தொடங்கி வைத்தார். 

அப்போது பேசிய வெங்கையா நாயுடு, எலிமெண்ட்ஸ் ஆப் என்ற செயலியை வாழும் கலை அமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உருவாக்கியுள்ளதற்கு பாராட்டு தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், யோகா குரு பாபா ராம்தேவ், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் உள்பட பலர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.  இந்த செயலி பண பரிமாற்றம், வீடியோ, ஆடியோ அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பயன்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து