முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூக பரவலை நெருங்கி விட்டோம் : கேரள அமைச்சர் ஷைலஜா பகீர் அறிவிப்பு

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : இந்தியாவிலேயே முதல்முறையாக கொரோனா வைரஸ் சமூகப் பரவல் நிலையை மிகவும் நெருங்கி விட்டது என கேரள அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளதாவது:-

கேரளாவில் கொரோனா வைரசின் சமூகப் பரவல் ஏற்கனவே தொடங்கி விட்டதா என நம்மால் சொல்ல முடியாது. ஆனால், நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்ளாதவர்களுக்கும் தற்போது அதிகளவில் தொற்று ஏற்படுகிறது. தினமும் 200 பேருக்கு பாதிப்பு உறுதியாகி வருகிறது. இதனால் நாம் சமூகப் பரவல் என்னும் நிலையை நெருங்கி விட்டோம்.

நாடு முழுவதும் அமலில் இருந்த முழு பொது முடக்கம் முடிவுக்கு வந்தவுடன், வெளிநாடுகளில் இருந்து 4.1 லட்சம் கேரள மக்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இதேபோல், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோரும் கேரளாவிற்கு திரும்பியுள்ளனர். இவர்களில் இதுவரை ஐந்தாயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் உள்ளூர் பரவலையும், இறப்பு விகிதத்தையும் கேரளா குறைத்துள்ளது. ஆனால், தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் இதே நிலை எட்டப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன். இல்லையெனில் அங்கிருந்து நிறைய மக்கள் கேரளாவிற்கு வந்தால் புதிய சிக்கல்கள் உருவாக கூடும்.  மேலும், கேரளாவை பொறுத்தவரை, கொரோனா நோயாளிகளில், 30-- 50 சதவீதத்தினருக்கு எவ்வித அறிகுறியும் காணப்படுவதில்லை.

இது மிகவும் சிக்கலான சூழலை உருவாக்கியுள்ளது என இந்திய மருத்துவ கழகத்தின் கேரள மாநில பிரிவின் துணைத் தலைவரான மருத்துவர் சுல்பியும் எச்சரித்துள்ளார். இதனால், கொரோனா வைரஸ் பரவல் வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதத்தில் முடிவுக்கு வரும் என்று நம்மால் உறுதிபட கூற முடியாது. இதனால், அவசர சட்டத்தை அடுத்தாண்டு ஜூலை மாதம் வரை நீட்டித்துள்ளோம்.

கேரளா ஒவ்வொரு முறையும் தேவைக்கு அதிகமாகவே பிரச்சனையின் வீரியத்தை எடுத்துக் கொள்கிறது. அப்போது தான் கொரோனா போன்ற கொடிய தொற்றை எதிர்கொள்ள முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து