முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோர் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்

திங்கட்கிழமை, 6 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : அச்சத்தை போக்கி மனதை வலிமைபடுத்திய முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள் 

ஒரு நாட்டில் மன்னன் உடல் நலமில்லாமல் இருந்தார் மன்னனை குணப்படுத்த பல்வேறு நாட்டு வைத்தியர்கள் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை இறுதியில் ஒரு விகடகவி, மன்னனிடம் மன்னா என்னிடம் மருந்து ஒன்று உள்ளது. அதை நீங்கள் எனது வீட்டிற்கு தினந்தோறும் நடந்து வந்து வாங்க வேண்டும். அப்போதுதான் அந்த மருந்து உங்களுக்கு வேலை செய்யும் என்று கூறினர். மன்னனும் நம்பிக்கையுடன் தினந்தோறும் சென்று அந்த மருந்தை சாப்பிட்டால் இதனால் விரைவில் அவன் உடம்பு குணமானது. இது குறித்து அந்த மருத்துவரிடம் மன்னர் கேட்ட போது மன்னா அது ஒன்றுமில்லை.

உங்கள் உடலில் ஜலதோஷம் அதிகமாக இருந்தது. அதற்கு தேவையான மருந்து சுக்காகும். சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை. உங்கள் உள்ளத்தில் ஒரு அச்சம் ஒன்று இருந்தது. அந்த அச்சத்தால் எவ்வளவோ மருந்து கொடுத்தும் நீங்கள் குணமடையவில்லை.

ஆனால் இங்கு தற்போது அந்த அச்சத்தை போக்கி மனம் வலிமையுடன் வந்ததால் உங்கள் நோய் குணமானது. ஆகவே ஒரு நோயாளிக்கு மருந்து மட்டுமல்ல, மனம் வலிமை இருந்தால் தான் குணப்படுத்த முடியும் என்று கூறினான், ஆகவே நோய் தீர்வுக்கு தேவை மனம் வலிமை, தைரியம்தான் என்பது காலம் தொட்டு கூறப்பட்டு வருகிறது,

உலகை இன்று அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்ற கொடிய வைரஸ் நோயால் உலக மக்கள் மிரண்டுள்ளனர், இந்த தொற்று நோயிலிருந்து தமிழக மக்களை காக்கும் வண்ணம் முதல்வர் இந்தியாவிற்கே வழிகாட்டும் வண்ணம் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதனால்தான் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் மக்களை பீதியடைய செய்யும் வகையிலும் மக்களின் மனதில் வலிமையை குறைக்கும் வகையிலும் விஷம பிரச்சாரம் செய்து வருகின்றனர்.  இதனை முறியடிக்கும் வகையில் முதல்வர் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், மனவலிமையூட்டும் வகையிலும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறார். 

அதனைத்தொடர்ந்து முதல்வரின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் இடங்களில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ், மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. தமிழரசன் உள்ளிட்டோர் நேரடியாக சென்று அங்கு இருக்கும் நோயாளிகளுக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கினர். 

இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது;- 

நீங்கள் அனைவரும் தைரியமாகவும், மனம் வலிமையுடன் இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டிய அனைத்து மருத்துவ வசதிகளை முதல்வர் செய்து கொடுத்துள்ளார். அதே போல் சிகிச்சை பெறும் உங்களுக்கு தினந்தோறும் யோகா, மூன்று வேளையும் புரதம் நிறைந்த உணவு, மேலும் காலை மாலை இருவேளையும் பழச்சாறு மற்றும் சூப் வகைகள், பாசிப் பருப்பு, சுண்டல் உள்ளிட்ட சத்தான உணவுகள் உங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக இந்த நோய் வராமல் இருக்க அனைவரும் முககவசம் அணிய வேண்டும்.  கைகளை நன்றாக சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். 

மதுரை மாவட்டத்தில் நோயின் ஆரம்ப நிலையை கண்டறிந்து அதற்குரிய உயர் சிகிச்சை அளித்து வருவதால் அதிகமானோர் குணமடைந்து வருகின்றனர். நீங்கள் விரைவில் பூரண நலம் பெற முதல்வர் உங்களுக்கு வாழ்த்து தெரிவிக்க சொன்னார்.  அதேபோல் இந்த மகத்தான பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோரின் பணிகள் எல்லாம் மிகவும் சிறப்புக்குரியது. நீங்கள் இறைவனுக்கு சமமானவர்கள். உங்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் நீங்கள் கேட்காமலே முதல்வர் செய்து வருகிறார். 

உங்கள் சேவையை பாராட்டி முதல்வர்  எங்களை நேரடியாக அனுப்பி உங்களுக்கு தனது வாழ்த்துக்களை முதல்வர் தெரிவிக்க சொன்னார்.  நீங்கள் மனம் வலிமையுடன் நிற்க வேண்டும். இந்த நோய் என்பது தொற்று நோயாகும். நீங்கள் தினந்தோறும் நோயாளியை சந்திக்கும் பொழுது உடல் முழுக்க கவசங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மருந்து மாத்திரை நீங்கள் அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

அதனைத் தொடர்ந்து அம்மா பேரவை சார்பில் கொரானா நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர் களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் உணவை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து மதுரை மாநகராட்சி பகுதிகளான யாகப்பா நகர், தாசில்தார் நகர் ஆழ்வார்புரம் ஆகிய பகுதிகளில் முதல்வர்  ஆணைக்கிணங்க நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை நிலையங்கள், மற்றும் வீடு வீடாக நடைபெற்று வரும் காய்ச்சல் கண்டறியும் முகாம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து அதன் பின் மக்களிடத்தில் அமைச்சர் உதயகுமார் கூறியதாவது, 

முக கவசம் அணிய வேண்டும். கைகளை நன்றாக கழுவ வேண்டும்.  சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நோயைப் பற்றி எதிர்க்கட்சிகள் கூறி வரும் விஷம பிரசாரத்தை நம்ப வேண்டாம். நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். மனம் வலிமையுடன் இருக்க வேண்டும்.

மதுரையில் அதிகமான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. முன்பெல்லாம் நான்கு அறிகுறி இருந்தால் சோதனை செய்வார்கள். தற்போது ஒரு அறிகுறி இருந்தாலே முதல்வர் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளார். மதுரையில் 95 காய்ச்சல் முகாம்கள் உள்ளன. தற்போது மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. அதே போல் மதுரையில் 8,433 தெருக்களில் 1625 நோய் உள்ள பகுதிகளை தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நுண்கிருமி தான். இந்த கிருமியை ஆரம்ப நிலையை கண்டுபிடித்துவிட்டால் உடனடியாக குணப்படுத்தி விடலாம். யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறினார்.

விவசாய கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் முருகன் என்பவர் கூறியதாவது,

நான் கடந்த ஒரு வாரம் முன்பு வந்தேன். தற்பொழுது எனது நோய் முற்றிலும் குணமடைந்து விட்டது. இங்கு காலையில் யோகா கற்றுத் தருகிறார்கள். அதே போல் சரியான முறையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. நான் ஆரம்பத்தில் பயந்தேன். ஆனால் முதல்வர் இதுபோன்று எடுத்து வரும் நடவடிக்கையால் எனக்கு பயமே போய் விட்டது. ஆகவே எங்களை போன்ற ஏழை, எளிய மக்களுக்கு முதல்வர் வரப்பிரசாதமாக திகழ்கிறார் என்று கூறினார்.

காய்ச்சல் முகாமில் பங்கேற்ற பெண்மணி மும்தாஜ் கூறியதாவது, 

ஆரம்பத்தில் நாங்கள் அச்சத்துடன் இருந்தோம். ஆனால் தற்பொழுது முதல்வர்  ஒவ்வொரு வீடாக சென்று நோயை கண்டறிய எங்கள் இல்லம் தேடி அரசின் சார்பில் மருத்துவ குழுவை அனுப்பி உள்ளார். இதன் மூலம் நோய் தெரியாமல் இருப்பவர்கள் எளிதில் கண்டறியப்படும். அதுமட்டுமல்லாது முதல்வர்  வழங்கியுள்ள அறிவுரைகளை எங்களுக்கு அமைச்சர் வழங்கினார்.

இதன்மூலம் எனக்கு அச்சம் நீங்கி விட்டது. முதல்வரின் அறிவுரைகளான முக கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும். இதை கடைபிடித்தாலே போதும். இந்த நோய் என்பது நம்மை அண்டாது என்று கூறியது எனக்கு முழு நம்பிக்கை பிறந்துள்ளது என்று கூறினார் 

தோப்பூரில் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவ ஊழியர் கூறியதாவது,

இந்த புனித பொறுப்பிலிருக்கும் எங்களுக்கு முதல்வர் தெரிவித்த வாழ்த்துக்களை அமைச்சர் கூறிய பொழுது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதுமட்டுமல்லாது எங்களுக்கு மூன்று வேளை உணவும், தொடர்ந்து பாதுகாப்பு கவசம் வழங்கி எங்களின் உடல்நிலையில் அக்கறை கொண்டு எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து தற்போது எங்களுக்கு மனம் வலிமையுடன் இருக்க அறிவுரை வழங்கி வரும் முதல்வருக்கு ஒட்டுமொத்த மருத்துவ பணியாளர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து