முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்குத்தான் : புதிய மசோதாவுக்கு அரியானா அமைச்சரவை ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 7 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

சண்டிகார் : அரியானாவில் 75 சதவீத தனியார் வேலைகள் சொந்த மாநிலத்தவருக்கே என்ற மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

தனியார் துறை வேலைகளில் மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா ஒன்றை கொண்டு வருவதற்கான திட்டத்திற்கு அரியானா அமைச்சரவை திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த வரைவு மசோதா அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் சபை முன் வைக்கப்படும். பா.ஜ.க. கூட்டணி கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜன்னாயக் ஜனதா கட்சி, தேர்தல்களில், முக்கியமாக தனியார் துறை வேலைகளில், மாநில இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக உறுதியளித்திருந்தது.

அதன்படி அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து இதற்கு அமைச்சரவை ஒப்புதலும் அளிக்கப்பட்டு உள்ளது. இது அரியானா மாநில இளைஞர்களுக்கு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று துஷ்யந்த் கூறியுள்ளார்.

கூட்டத்திற்குப் பிறகு, சவுதாலா, நேற்று அரியானாவின் இளைஞர்களுக்கு ஒரு வரலாற்று நாள், ஏனெனில் இப்போது தனியார் துறை தொழில்கள் மற்றும் நிறுவனங்கள் அரியானாவின் இளைஞர்களுக்கு 75 சதவீத வேலைகளை வழங்குவது கட்டாயமாக இருக்கும் என கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து