முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறும் ரஷ்ய ஆய்வுக்கூடம் மீது மின்னல் தாக்கியது

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      உலகம்
Image Unavailable

கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சி நடைபெறுகிற ரஷ்ய ஆய்வுக்கூடம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் ரஷ்ய அறிவியல் அகாடமியின் ஷெமியாகின் அண்ட் ஓவ்சின்னிகோவ் உயிர் வேதியியல் நிறுவனத்தின் ஆய்வுக்கூடம் செயல்பட்டு வருகிறது. இங்குதான் அந்த நாட்டுக்கான கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி உருவாக்கப்பட்டது. தற்போது அங்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆராய்ச்சி நடக்கிறது. இந்த ஆய்வுக்கூடத்தின் மீது கடந்த செவ்வாய்க் கிழமை இரவு திடீரென மின்னல் தாக்கியது. இதில் அதன் கூரையில் தீ பிடித்து லேசாக சேதம் ஏற்பட்டது. அரை மணி நேரத்தில் அந்த தீ அணைக்கப்பட்டு விட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது.  இருப்பினும் ஆய்வுக்கூடத்தினுள் எந்த சேதமும் இல்லை. அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கும், ஊழியர்களுக்கும் எந்தவொரு பாதிப்பும் இல்லை. வழக்கமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாக மாஸ்கோவில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து