முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேஷன் கடைகளில் இன்று முதல் இலவச பொருட்கள் வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ் தகவல்

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

ரேஷன் கடைகளில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூரில், அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக ஈடுபட்டு வருவதால் நோய் தொற்றின் விரீயம் குறைவாக உள்ளது. கொரோனா வைரஸ் சிகிச்சையில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்புபவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமாக உள்ளது. முதல்வர் அறிவித்த இ-சஞ்சீவினி என்கிற ஆன்லைன் திட்டம் சிறப்பு வாய்ந்தது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளும், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்களும், கர்ப்பிணிகளும் வீட்டில் இருந்தபடியே டாக்டரின் ஆலோசனைகளை பெறலாம். திருவாரூர் மாவட்டத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோன்ற சிறப்பு திட்டங்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வாங்க கடந்த 6-ம்  தேதி முதல் வியாழக்கிழமை வரை டோக்கன் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரத்தின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தொடர்புடைய ரேசன் கடைகளில் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும். அதற்கான பொருட்கள் அனைத்து ரேசன் கடைகளுக்கும் சென்று விட்டது.  மத்திய அரசு முன்னுரிமை உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி அறிவித்துள்ளது. அது இல்லாமல் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகள் இரண்டும் சேர்த்து 2 கோடியே 2 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தனது சொந்த நிதியில் விலை கொடுத்து வாங்கி அரிசியை பொதுமக்களுக்கு வழங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து