முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியீடு

வியாழக்கிழமை, 9 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

நீட் தேர்வு மற்றும் பல்கலைக் கழக நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு (NEET), பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் (JEE MAIN) மற்றும் கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

தேர்வு நடக்கும்போது மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் நடத்தப்பட வேண்டும். தேர்வு அறை கண்காணிப்பாளருக்கு உடல்நிலை சான்றிதழ் அவசியம் வழங்கப்பட வேண்டும். மாணவர்களுக்கு புதிய முக கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட வேண்டும். தேர்வு மையத்தின் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதும் இருக்கைகள் அனைத்தும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். மாற்று திறனாளி மாணவர்கள் அமரும் சக்கர நாற்காலிகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும். மாணவர்கள் அமரும் இருக்கை எண்களை ஸ்டிக்கர் அல்லது வண்ண பெயிண்ட் மூலம் குறிப்பிட வேண்டும். தேர்வு நடைபெறும் இடங்களில் உள்ள குப்பை தொட்டிகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும். தேர்வு மையத்திற்கு மாணவர்கள் மற்றும் அவர்களுடன் பெற்றோரும் வரும் போது தேர்வு எழுதும் வளாகத்தில் கூட்டம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதிய அனைத்து இருக்கைகளும் கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து