முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸி. மண்ணில் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்ப்பேன் : விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூலை 2020      விளையாட்டு
Image Unavailable

Source: provided

மும்பை : நீங்கள் நன்றாக விளையாடுவதை விட ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற வேண்டும் என்றே நினைப்பேன் என்று விராட் கோலிக்கு கங்குலி மெசேஜ் தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. அப்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என வென்று ஆஸ்திரேலியா மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. அப்போது ஆஸ்திரேலியா அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லை.

தற்போது அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்கள். இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு போட்டிகளில் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.  இந்திய அணி கடந்த முறை போன்று டெஸ்ட் தொடரை கைப்பற்ற ஆவலாக உள்ளது. அதேவேளையில் இந்தியா மீண்டும் தொடரை கைப்பற்றுவது எளிதானது அல்ல என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.  

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலியும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார். 2018-ம் ஆண்டு தொடர்போல் எளிதாக இருக்காது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சவுரவ் கங்குலி கூறுகையில், 

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் கடினமாக இருக்கப்போகிறது. 2018-ல் நமக்கு எப்படி இருந்ததோ, அது போன்று இருக்காது. தற்போதுள்ள அணி மிகவும் வலுவான அணி. ஆனால் நம்முடைய அணி சிறந்தது. சிறந்த பேட்டிங் மற்றும் பந்து வீச்சு நம்மிடம் இருக்கிறது.  நம் அணி மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது.

இருந்தாலும் நாம் கொஞ்சம் கூடுதலாக சிறப்பான வகையில் பேட்டிங் செய்ய வேண்டும். வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளங்கிய அணிகள், சிறப்பாக பேட்டிங் செய்திருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நாம் வெளிநாட்டு மண்ணில் (இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான்) வெற்றி பெற்றபோது, நம்முடைய ஸ்கோர் 400, 500 மற்றும் 600-க்கு மேல் இருந்திருக்கும்.  

விராட் கோலியின் தரம் உயர்ந்ததாக உள்ளது. நீங்கள் விளையாட போகும்போதும், உங்களுடைய அணியுடன் நீங்கள் செல்லும்போதும், நான் போட்டியை  டி.வி.யில் பார்த்துக் கொண்டிருக்கும்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நீங்கள் மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். நாங்கள் உங்களிடம் வெற்றியை எதிர்பார்ப்பேன்.

என்னை பொறுத்தவரைக்கும் இதுதான்.  ஏனென்றால், நீங்கள் ஒரு தரமான வீரராக நிலைகொண்டு விட்டீர்கள். அது மற்ற வீரர்களிடம் இல்லை. ஆகவே, அந்த உயர்ந்த நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும். டிசம்பர் மாதம் வரை என்னுடைய பிசிசிஐ தலைவர் பதவி நீட்டிக்கப்படுமா? என்ற எனக்குத் தெரியாது. ஆனால் அவருடைய கேப்டன் பதவி உறுதியாக நீடிக்கும். இது ஒரு சாதனைத் தொடராக இருக்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து