முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சானிடைசருக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி: மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

கைகளைச் சுத்தம் செய்யும் சானிடைசர் உள்ளிட்ட கிருமிநாசினி பொருட்கள் அனைத்தும் 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி வீதத்துக்குள் வரும் 12 சதவீத ஜி.எஸ்.டி. வரிக்குள் வராது என்று மத்திய நிதியமைச்கம் விளக்கம் அளித்துள்ளது.

ஸ்பிரிங்பீல்ட் (இந்தியா) டிஸ்டில்சர்ஸ் நிறுவனம் கோவா மாநிலத்தின் ஜி.எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் ஏ.ஏ.ஆர். ஆணையத்திடம் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.  அதில், சானிடைசரை மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் வைத்துள்ளதால் ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறதா அல்லது மருத்துவப் பொருட்கள் என்பதால் அதற்கு 12 சதவீதம் மட்டுமே ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்டிருந்தது. இதை விசாரித்த கோவா ஏ.ஏ.ஆர். ஆணையம் அளித்த உத்தரவில், அத்தியாவசியப் பொருட்கள் என்ற பட்டியலில் சானிடைசர் இருந்தாலும் அதற்கு ஜி.எஸ்.டி. வரியிலிருந்து விலக்கு அளிக்க முடியாது. ஆல்கஹால் கலந்த ஹெச்.எஸ்.என். பிரிவில் வருவதால் அதற்கு 12 சதவீதம் அல்ல, 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் வரும்.  பெரும்பாலான உற்பத்தியாளர்கள் ஆல்கஹால் கலந்த சானிடைசரை ஜி.எஸ்.டி. எண் 3004 பிரிவில் 12 சதவீத வரியின் கீழ் வருகிறது என்று நினைக்கிறார்கள். ஆனால், ஹெ.எஸ்.என். 3008 பிரிவின்படி 18 சதவீத வரிக்கு உட்பட்டதாகும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், சானிடைசர் தயாரிக்கப் பயன்படும் பல்வேறு வேதி உள்ளீடு பொருட்கள், சோப்பு, கிருமிநாசினி திரவங்கள், சோப்பு, டெட்டால் உள்பட அனைத்தும் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பின் கீழ் வரும். கிருமிநாசினி, சானிடைசர் போன்றவற்றுக்கு ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்தால், அது பாதகமான விளைவுகளை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படுத்தி விடும். இதனால் இறக்குமதி அதிகரித்து, உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இது தேசத்தின் தற்சார்பு பொருளதாாரக் கொள்கைக்கு விரோதமாக அமைந்து விடும். ஜி.எஸ்.டி. வரியைக் குறைத்தாலும், தலைகீழ் வரிவிதிப்பின் கீழ் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கும் பயன்கிடைக்காத பட்சத்தில் நுகர்வோர்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து