முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

151.57 கோடியில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டபணிகள்: ஈரோட்டில் இன்று முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டுகிறார்

வியாழக்கிழமை, 16 ஜூலை 2020      தமிழகம்
Image Unavailable

ஈரோடு மாவட்ட கலெக்டர்  அலுவலக வளாகத்தில் இன்று காலை 10.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 151.57 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 4,642 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சிக்கு  அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தலைமை வகிக்கிறார். அமைச்சர் கே.சி.கருப்பணன் முன்னிலை வகிக்கிறார்.  பள்ளிக்கல்வித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பொதுப்பணித்துறை (கட்டுமானம்), வேளாண்மைத்துறை,  பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ. 21.73 கோடி மதிப்பீட்டில் 13 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ. 76.12 கோடி மதிப்பீட்டில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு துறைகளின் சார்பில் 4,642 பயனாளிகளுக்கு ரூ.53.17 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.151.57 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பணிகள் குறித்த ஆவணப்படம் வெளியிட்டு சிறப்பிக்கவுள்ளார்.

 அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்துறை முதன்மை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து, சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்களுடன் முதல்வர் கலந்தாய்வு மேற்கொள்கிறார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள்,கே.வி. ராமலிங்கம் கே.ஏ. தென்னரசு. சிவசுப்பிரமணியம் மற்றும்  சிறு, குறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து