புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது : முதல்வர் நாராயணசாமி சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஆகஸ்ட் 2020      இந்தியா
Narayanasamy 2020 08 02

Source: provided

புதுச்சேரி : புதிய கல்வி கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மக்கள்கருத்தை கேட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறுகையில், 

புதுச்சேரியில் சித்த மருத்துவ சார்பில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு பயன்படாத கல்வி கொள்கை, புதிய கல்வி கொள்கையால் புதுச்சேரியில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக புதுச்சேரி மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தை கேட்டுத்தான் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பாதிப்புள்ள தற்போதைய சூழலில் மாணவர் கல்வி பயில மாற்று ஏற்பாட்டை மத்திய அரசு மாநில அரசுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து