முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை: உள்துறை அமைச்சகம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 9 ஆகஸ்ட் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்து இருந்தார். 

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது. இதனிடையே அமித்ஷா குணமடைந்ததாக கூறிய தனது டுவிட்டர் பதிவை பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி நீக்கி உள்ளார். 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மாநில முதல்வர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் பாதிக்கப்படும் நிலையும் இருந்து வருகிறது. மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

ஒடிசா, அசாம், உத்தரப் பிரதேசம், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெற்றிகரமாக மீண்டுள்ளனர்.

சிலர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரியானாவின் குருகிராமில் உள்ள மெதந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அமைச்சர் அமித்ஷாவை கடந்த சனிக்கிழமை சந்தித்துப் பேசியதால், தன்னை தனிப்படுத்திக் கொண்டுள்ளதாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.

இது போல, அமித்ஷாவுடன் தொடர்பில் இருந்த மத்திய அமைச்சர்கள் பாபுல் சுப்ரியோவும் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் அமித்ஷா கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று ஏற்பட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தற்போது பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு நெகட்டிவ் என வந்துள்ளது எனக் கூறி இருந்தார்.

இந்நிலையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமித்ஷாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது. இதனிடையே அமித்ஷா குணமடைந்ததாக கூறிய தனது டுவிட்டர் பதிவை பா.ஜ.க. எம்.பி. மனோஜ் திவாரி நீக்கி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து