வெங்கையா நாயுடு குறித்து சிறப்பு புத்தகம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்

புதன்கிழமை, 12 ஆகஸ்ட் 2020      இந்தியா
Prakash Javadekar 2020 07 29

Source: provided

புதுடெல்லி : துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் இணைதல், தொடர்பு கொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல் என்ற மின்னணு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் 3 ஆண்டு கால பணி நிறைவையொட்டி, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில், இணைதல், தொடர்புக் கொள்ளுதல், மாற்றத்தை உருவாக்குதல் என்ற மின்னணு புத்தகம் வெளியீட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.

விழாவில் இந்த புத்தகத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். அதன் அச்சுவடிவிலான காபி டேபிள் புத்தகத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். 

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசுகையில், இந்த புத்தகம் என்னுடைய குறிக்கோள்கள், விளைவுகளை வெளிப்படுத்துகிறது. கடந்த ஓராண்டின் முதல் கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பொது நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டேன். சராசரியாக ஒரு மாதத்தில் 20 பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். தற்போது கொரோனா பாதிப்பால் நிகழ்ச்சிகள் குறைந்து விட்டது என்றார். 

வெங்கையா நாயுடுவின் அயல்நாட்டு பயணங்கள், உலகத் தலைவர்களுடனான கலந்துரையாடல், பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியினருடன் அவர் நிகழ்த்திய உரைகள் ஆகியவை இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து