முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.13 கோடியாக உயர்வு

சனிக்கிழமை, 15 ஆகஸ்ட் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : உலக அளவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.13-கோடியாக உயர்ந்துள்ளது. 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. 

உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த கொடிய வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. 

முதலில் தொற்று வேகமாக பரவிய ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில் தொற்று பரவல் அதிகமாக உள்ளது.

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.62 லட்சத்தைக் கடந்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.13-கோடியைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.41-கோடியைத் தாண்டியுள்ளது. 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து