சத்தீஸ்கரில் ஆயுதப்படை வீரரை கடத்தி கொன்ற மாவோயிஸ்டுகள்

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      இந்தியா
Chhattisgar 2020 09 18

Source: provided

ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் 7 நாட்களுக்கு முன்பு காணாமல் போன ஆயுதப்படை வீரரை, மாவோயிஸ்டுகள் படுகொலை செய்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அரசு சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கின்றனர். மாவோயிஸ்டுகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.  

இந்நிலையில், பிஜப்பூர் மாவட்டம் பட்டேடா கிராமத்தில் சத்தீஸ்கர் ஆயுதப்படையைச் சேர்ந்த ஒரு வீரர் கடந்த 7 நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அவர்களை மாவோயிஸ்டுகள் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நேற்று கிடைத்துள்ளது.

ஆயுதப்படை வீரரை மாவோயிஸ்டுகள் கொலை செய்து அவரது உடலை கங்காலூர் - பிஜப்பூர் சாலையில் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.  அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது கொலைக்கு காரணமான மாவோயிஸ்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து