துணை முதல்வர் பதவி வேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர்

வெள்ளிக்கிழமை, 18 செப்டம்பர் 2020      இந்தியா
Sri-Ramulu 2020 09 18

Source: provided

பெங்களூரு : துணை முதல்வர் பதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பா.ஜ.க. அமைச்சர் ஒருவர் கடவுளுக்கு கடிதம் எழுதியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ரீ ராமுலு, இவர் சமீபத்தில் யாதகிரி மாவட்டத்திலுள்ள காடே துர்கா தேவி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.

அப்போது, கடவுளுக்கு ஒரு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

கடவுளுக்கு கோரிக்கை விடுத்து அமைச்சர் எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்ற போது அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு துணை முதல்வர் பதவி கிடைப்பது உறுதி என பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து