முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

மாஸ்கோ : கொரோனாவுக்கு எதிரான ரஷ்ய தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதில் முதல் நாடாக ரஷ்யா கடந்த மாத தொடக்கத்திலேயே தடுப்பூசி ஒன்றை பதிவு செய்து கொண்டுள்ளது. 

ரஷ்யாவின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் 100 கோடிக்கும் அதிகமான டோஸ்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதைப்போல இந்த தடுப்பூசியை அதிக அளவில் தயாரிக்க 5 நாடுகளும் ஒப்பந்தம் போட்டுள்ளன. 

இந்த நிலையில் ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகெயில் முராஸ்கோவை உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய தலைவர் ஹன்ஸ் குளூஜ் சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

கொரோனா தடுப்பூசியை உருவாக்கியதற்காக குறிப்பாக ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்காக ரஷ்யாவுக்கு உலக சுகாதார அமைப்பு மிகுந்த பாராட்டு தெரிவிக்கிறது. பாதுகாப்பு மற்றும் வலிமையான ஒரு தடுப்பூசியை உருவாக்கியதற்காக ரஷ்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து