முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை: மக்களுக்கு நன்மை தராத எந்த திட்டமாக இருந்தாலும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது: மதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

செவ்வாய்க்கிழமை, 22 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை என்றும் தமிழக மக்களுக்கு நன்மை தராத எந்த திட்டமாக இருந்தாலும் அ.தி.மு.க. அரசு ஆதரிக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, 

தமிழ்நாட்டில் அரசு எடுத்த தீவிர நடவடிக்கையால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கொரோனா தொற்று  பரவலை தடுக்க அரசு  அறிவிக்கும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனைப்படி கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

தமிழக மக்களுக்கு நன்மை தராத எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதிமுக அரசு ஆதரிக்காது. மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை.

வேளாண் மசோதாவினால் உணவு பதப்படுத்தும்  தொழில் நல்ல முன்னேற்றமடையும்; கிராம பொருளாதாரம் உயரும். விவசாயிகள் விருப்பப்பட்டால் மட்டுமே வியாபாரிகளிடம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளலாம். கட்டாயமில்லை என்று தெரிவித்தார். 

உணவுப்பதப்படுத்துதல் வளர்ச்சி அடைந்தால் கிராமப்  பகுதிகளில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். ஒப்பந்தம் செய்த விலைக்கே கொள்முதல் செய்யவில்லை என்றால் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்க முடியும். விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற இந்த சட்டம் உதவும். விவசாயி என்பதால், வேளாண் மசோதா குறித்து நன்கு அறிவேன்.

வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் எந்த நிலையிலும் நஷ்டம் அடைய மாட்டார்கள். விவசாயிகள் சந்தை கட்டணம், வரி இல்லாமல் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும்.

சந்தையில் விலை குறைந்தாலும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். விளைப்பொருட்களின் விலையை விவசாயிகளே நிர்ணயம் செய்ய முடியும். பஞ்சாப்பில் விவசாயி, வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் வரி, இடைத்தரகர் கட்டணம் என 9 சதவீதம் அதிகமாக கொடுக்க வேண்டும். வதந்தி பரப்பப்படுவதால் பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து