இந்தியாவுடன் உறுதியான நட்புறவு; ஜோ பிடன் ஆதரவாளர்கள் பிரசாரம்

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      உலகம்
Jopitan 2020 09 23

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், இந்தியாவுடன் நிலையான, உறுதியான நட்புறவுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவரை ஆதரிக்கும் அமெரிக்கவாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3-ம் தேதி நடக்கிறது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோபிடனும் போட்டியிடுகின்றனர். இங்கே, 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர்.

இவர்களின் ஓட்டுகளை பெற டிரம்பும், ஜோபிடனும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே, ஜோ பிடனுக்கு அதிக ஆதரவு உள்ளது. 

இந்நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியதாவது: கொரோனாவிடம், அதிபர் டிரம்ப் தோல்வியடைந்து விட்டார். கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என, டிரம்புக்கு தெரியவில்லை.

இந்த தொற்றுடன் எவ்வளவு நாள் வாழ வேண்டும் என, அமெரிக்கர்கள் கவலையுடன் உள்ளனர். கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற வேண்டிய தன் கடமையில், டிரம்ப் பெரும் தோல்வி அடைந்து விட்டார்.இவ்வாறு ஜோ பிடன் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து