விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் : இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020      சினிமா
Lokesh-Kanagaraj 2020 09 23

Source: provided

சென்னை : விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில்தான் வெளியாகும் என அப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கடந்த ஏப்ரலில் திரைக்கு வர வேண்டியது. கொரோனா பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் படத்தின் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் பரவியது. இதை படக்குழு மறுத்து வந்தது. இந்நிலையில் நேற்று கோவைக்கு வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நிருபர்களிடம் கூறியதாவது, 

மாஸ்டர் படத்துக்கு எதிர்பார்ப்பு கூடி வருகிறது. இந்த படத்தை தியேட்டரில்தான் ரசிக்க முடியும். அதனால் கண்டிப்பாக தியேட்டர்களில்தான் இந்த படம் வெளியாகும்.

ஓடிடி தளத்தில் வெளியிட மாட்டோம். தியேட்டர்கள் திறந்த பிறகு, மாஸ்டர் படம் எப்போது திரைக்கு வரும் என்பதை அறிவிப்போம். இவ்வாறு லோகேஷ் கனகராஜ் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து