முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முதல்வரை பிரதமர் மோடி பாராட்டியதை கொச்சைப்படுத்துவதா? -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு கடும் கண்டனம்

வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிஅணைகரைபட்டியை சார்ந்த ரமேஷ் என்ற மாணவன் அகாலமரணம் அடைந்தார் அதைத் தொடர்ந்து அவர் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடு திட்டத்திற்கான ஒதுக்கீடு மற்றும் முதியோர் ஓய்வு தொகை வழங்கி அதன்பின் ஆதிதிராவிட சட்ட பட்டப்படிப்பு படித்த மாணவர்களுக்கு தொழில் தொடங்க 50,000 நிதி உதவியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வினய்,மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். எஸ். சரவணன், கே.மாணிக்கம், பெரியபுள்ளான் என்ற செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் தொடர்ந்து மதுரையில் கழக அம்மா பேரவை சார்பில் கொரோனா நோய்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவை ஆய்வு செய்தார். 

இதில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறியதாவது; 

இந்தக் கோவிட் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களுக்கும் தமிழக முதலமைச்சர் எடுத்துக்காட்டாக சீரிய முறையில் சிறப்பான முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று இந்திய தேசத்தின் வலிமைமிக்க பாரதபிரதமர் வாழ்த்து தெரிவித்து தமிழகம் பிறமாநிலங்களுக்கு வழிகாட்டும் மாநிலம் அமைந்துள்ளது என்று கூறியுள்ளார். 

உலகில் தலைசிறந்த 100 தலைவர்கள் பட்டியலில் இடம் பிடித்த பாரத பிரதமர் பாராட்டி இருப்பது ஒட்டுமொத்த இந்திய தேசமே தமிழகத்தை பாராட்டுவதற்கு சமமாகும் இதன் மூலம் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமையை முதலமைச்சர் பெற்றுத் தந்து உள்ளார் இதற்கு துணை முதலமைச்சர் உறுதுணையாக இருந்து வருகிறார். 

ஆனால் இதை பாராட்ட மனமில்லாத எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசை பிரதமர் பாராட்டியதை விமர்சனம் செய்து வருகிறார்,

பிரதமரின் பாராட்டை எதிர்கட்சி தலைவர் கொச்சைப்படுத்தி பேச வேண்டாம், பிரதமரின் பாராட்டுக்கு உள்நோக்கம் கற்பிப்பது அனாகரிக செயலாகும் எதற்கெடுத்தாலும் கேரளாவை பாருங்கள் என்று கூறும் எதிர்க்கட்சிகளுக்கு மற்ற மாநிலங்களுக்கு ரோல் மாடலாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று பாரதப் பிரதமர் பாராட்டி மூலம் மக்களுக்கு நன்றாக புரிந்து உள்ளது. 

மதுரையில் கொரோனா தற்போது கட்டுக்குள் வந்துள்ளது, மதுரையில் ஆரம்ப நிலையிலேயே கொரோனா கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  ஆரம்பத்தில் இந்த நோய் தாக்கம் 4 சதவீதம் இருந்தது அதன்பின் 20 சதவீதமாக உயர்ந்தது

மதுரை மாவட்டத்தில் 35 லட்சம் மக்கள் தொகை கொண்டது இந்த நோய் தடுப்பு பணி என்பது மிகவும் சவாலான காரியம் தான் ஆனால் முதலமைச்சர் தொடர்ந்து பல்வேறு அறிவுரைகள் வழிகாட்டுதல் வழங்கினார் அதனை பின்பற்றி மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டதால் தற்போது குறைந்து இதுவரை மதுரை மாவட்டத்தில்16,175 நபர்கள் பாதிக்கப்பட்டனர்

இதில்15,040 நபர்கள் குணமடைந்து வீட்டுக்கு சென்றனர் இதன் மூலம் 93 சதவீதம் பேர் இந்த நோயினால் குணமடைந்துள்ளனர் தற்போது754 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் தற்போது மதுரை மாவட்டத்தின் 5,000 படுக்கைகள் தேவையான மருத்துவ உபகரணகள் தயார் நிலையில் உள்ளது. 

அதுமட்டுமல்லாது முதலமைச்சர் அறிவுரைப்படி மதுரை மாநகராட்சி பகுதியில் 10,642 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது புறநகர் பகுதிகளில் 10,613 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 21,265 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது இதில் 4,51,971 மக்கள் இந்த முகாமில் பங்கேற்றனர். 

இதுபோன்று நோய் தடுப்பு நடவடிக்கையால் மதுரை மாவட்டம் பாதுகாப்பான மாவட்டமாக விளங்குகிறது, மருந்தே இல்லாத கொரைனாவை கடும் நடவடிக்கையால் கட்டுக்குள் கொண்டு வந்து உள்ளளோம் தற்போது மதுரை மாவட்டம் நோய் தடுப்பு பணியில் மற்ற மாவட்டங்களுக்கு முதன்மையாக திகழ்ந்து ண்டு வருக்கிறது .

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்ட மசோதாக்கள் குறித்து மதுரையில் முதலமைச்சர் தெளிவான, விரிவான விளக்கம் அளித்து விட்டார், விவசாயிகளுக்கு குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்கும் வேளாண் சட்ட மசோதா குறித்து எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது, எதிர்கட்சிகளின் பிரச்சாரம் வெற்றியை தராது,

வேளாண் மசோதா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை பிரச்சாரம் செய்யப்படும், காலத்திற்கு ஏற்ப வியாபாரம் மாறும், அந்த வகையில் இந்த மாற்றத்தை பார்க்க வேண்டும்,வேளாண் சட்டங்களை ஆராய்ந்து படித்து பார்த்தால் முழு விபரங்கள் தெரிய வரும், 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது, மழை நீர் தேங்காமல் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது, வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழ் மரபை, பண்பாட்டை அதிகமாக நேசித்தார் பிரதமர் மோடி, கலாச்சார ஆய்வு குழுவில் தமிழ் கலாச்சாரத்தை எடுத்து செல்ல உறுப்பினர்கள் இல்லை, கலாச்சார ஆய்வு குழுவில் தமிழர்கள் இடம்பெற வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார் என்று கூறினார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து