முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளிக்குடி ஒன்றியம் வில்லூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருமங்கலம் : மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் வில்லூர் கிராமத்தில் கொட்டும் மழையின் நடுவே கழக அம்மா பேரவை,எம்.ஜி.ஆர் இளைஞரணி, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உள்ளிட்ட சார்புஅணிகளுக்கு புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் முகாமையும், அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாமினையும் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் அம்மா பேரவை,எம்.ஜி.ஆர் இளைஞரணி மற்றும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை உள்ளிட்ட சார்புஅணிகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக முகாம் கள்ளிக்குடி ஒன்றியம் வில்லூர் கிராமத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல்,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் கபிகாசிமாயன்,மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்யா, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் மகாலிங்கம், கள்ளிக்குடி யூனியன் சேர்மன் மீனாட்சி மகாலிங்கம்,துணை சேர்மன் கலையரசி கண்ணன்,வில்லூர் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி ஆகியோர் வரவேற்றனர்.

கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள்,பொதுமக்கள் பங்கேற்ற இந்த முகாம்களில் தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு தலைமையேற்று புதிய உறுப்பினர் படிவங்களை சார்புஅணியில் இணைந்திடவுள்ள இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு நேரில் வழங்கி வாழ்த்து தெரிவித்து சிறப்புரையாற்றினார்.

மேலும் அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென தொடங்கி வைத்தார்.

பின்னர் மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா எதிர்ப்பு தந்திடும் கபசுரகுடிநீர் சூரணம், ரஸ்க்,முககவசம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். முன்னதாக கள்ளிக்குடி ஒன்றியத்தில் ரூ.50லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கே.வெள்ளாகுளம் ஆரம்பசுகாதார மையம் மற்றும் வில்லூர் கிராமத்தில் சிமெண்ட் பேவர் பிளாக் சாலைகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்நிகழ்வுகளில் மாவட்ட கழக அவைத்தலைவர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம்,மாவட்ட மீனவரணி செயலாளர் சௌடார்பட்டி சரவணபாண்டியன்,திருமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் வக்கீல்.அன்பழகன், கட்சி நிர்வாகிகள் வேப்பங்குளம் கண்ணன்,வேல்பாண்டி,சுகுமார்,உரப்பனூர்சாமிநாதன், பிரபுசங்கர், சரவணபாண்டியன்,வில்லூர் சரவணன்,ஆதி(எ)ராஜா, உச்சப்பட்டி செல்வம், வெல்டிங்முருகன், பொன்னமங்கலம் ஜெயமணி,காலேஜ் விவேக், கோடீஸ்வரன், புங்கங்குளம் ஜெயராமன், கூல்பாண்டி, ரமேஷ், சிவஜோதிதர்மர், பி.ஆர்.சி. அழகர்சாமி,தளபதிசெல்வா மற்றும் மதுரை வேலம்மாள் மருத்துவமனை மருத்துவக்குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து