முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியாக வாய்ப்பு

சனிக்கிழமை, 26 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் நாளை 28-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது. அந்த வகையில் 2020-21-ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். 

அதன் தொடர்ச்சியாக ரேண்டம் எண் கடந்த மாதம் (ஆகஸ்டு) 27-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது. மாணவர்கள் சிலர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் கேட்டனர்.

இதையடுத்து தரவரிசை பட்டியல் 25-ம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை.  இந்த நிலையில் என்ஜினீயரிங் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 28-ம் தேதி (திங்கட்கிழமை) வெளியாக அதிகம் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து