முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முன்னாள் மத்திய அமைச்சர்  ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜனதா மூத்த தலைவருமான ஜஸ்வந்த் சிங் (82) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீ. ஜஸ்வந்த் சிங் ஜி இறந்ததைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். மத்திய அமைச்சராக இருந்தபோது தீர்க்கமான முடிவுகளை எடுத்தவர். ராணுவத்தில் பணியாற்றிய ஜஸ்வந்த் சிங், சிறந்த அரசியல் அனுபவமும் கொண்டவர். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும். என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீ. ஜஸ்வந்த் சிங் ஜி இறந்ததைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு திறமையான நிர்வாகியாக இருந்தார். எங்கள் அன்பான அம்மாவுடனான அவரது நட்பினை நாங்கள் அன்புடன் நினைவு கூறுகிறோம். அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். மனமார்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க.வின் மூத்த அரசியல் தலைவருமான ஜஸ்வந்த் சிங் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். 30ஆண்டுகளுக்கும் மேலாக பாராளுமன்ற உறுப்பினராகவும், வெளியுறவுத்துறை, பாதுகாப்பு, நிதித்துறை அமைச்சராகவும் பொதுப்பணி ஆற்றியவர். ஜஸ்வந்த் சிங்  பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான ஜஸ்வந்த் சிங் காலமானதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். தி.மு.க. சார்பாக, எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து