முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி

திங்கட்கிழமை, 28 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

பெங்களூர் : கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். 

மத்திய, மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பா.ஜ.க.வைச் சேர்ந்தவரும், கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜே.சி.மதுசுவாமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.    முன்னதாக, அமைச்சரின் ஓட்டுநருக்கும், வீட்டு சமையலருக்கும் தொற்று இருப்பது உறுதியானது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து