முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 2 பேர் இடமாற்றம்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக காவல்துறையில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

தமிழக லஞ்ச ஒழிப்பு டி.ஜி.பி. விஜயகுமார் நேற்றுடன் ஓய்வு பெறுவதை ஒட்டி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏ.டி.ஜி.பி. அந்தஸ்து அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.  

தமிழக காவல் துறையில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி .பதவி முக்கியமானது. இது தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்கும் பதவி. இதுதவிர கூடுதல் டி.ஜி.பி.யாக (ஏ.டி.ஜி.பி) சட்டம் ஒழுங்கு பதவி உள்ளது. இவருக்குக் கீழ் சென்னை காவல் ஆணையரகம் தவிர மற்ற மாநிலம் முழுவதும் உள்ள, மண்டல ஐ.ஜி.க்கள், டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட எஸ்.பி.க்கள் வருவார்கள்.

இதேபோன்று லஞ்ச ஒழிப்புத்துறை தனியாக இயங்கக்கூடிய முக்கியமான ஒரு பிரிவு. இதன் ஏ.டி.ஜி.பி. பதவி நிலை உயர்த்தப்பட்டு டி.ஜி.பி. அளவிலான அதிகாரியாக விஜயகுமார் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையொட்டி லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. பதவி, ஏ.டி.ஜி.பி. அந்தஸ்துக்குக் குறைக்கப்பட்டு ஏ.டி.ஜி.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது, 

தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். ( இந்தப் பதவி டி.ஜி.பி.யிலிருந்து, ஏ.டி.ஜி.பி. பதவிக்குக் குறைக்கப்பட்டுள்ளது).  மதுவிலக்கு அமல் கூடுதல் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மாற்றப்பட்டு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து