முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராமகோபாலன் சென்னையில் காலமானார்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் ராமகோபாலான் சென்னையில் காலமானார்.

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக  கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.இதையடுத்து போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.  இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை முடிவுவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.  தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ராம கோபாலன்(94) சென்னையில் காலமானார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து