ராமகோபாலன் மறைவு: துணை முதல்வர் ஓ.பி.எஸ். இரங்கல்

புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020      தமிழகம்
ops 2020 09 30

Source: provided

சென்னை : இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனுக்கு வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது. ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட போது போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.  இதையடுத்து, கடந்த 27-ம் தேதி மீண்டும் ராம கோபாலன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி வெளியான பரிசோதனை முடிவுவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

தொடர்ந்து, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி ராம கோபாலன்(94) சென்னையில்  காலமானார். இதையடுத்து ராம கோபாலன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் ராம கோபாலன் மறைவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

 

இந்து முன்னணி அமைப்பின் நிறுவனர் இராம கோபாலன்  காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.

இராம கோபாலனது பிரிவால்வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும், இந்து முன்னணி அமைப்பினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து