முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20-வது முறையாக கொரோனா பரிசோதனை: பிரீத்தி ஜிந்தாவுக்கு புது பெயர் சூட்டிய நெட்டிசன்கள்

வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2020      விளையாட்டு
Image Unavailable

13-வது ஐபிஎல் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் படுதோல்வியை சந்தித்திருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அண்மையில் பெற்ற சில வெற்றிகளின் மூலம் மீண்டும் மீண்டெழுந்து புள்ளிகள் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

அந்த அணியின் நிர்வாகியான பிரீத்தி ஜிந்தா ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்கு வருகை தந்து, தங்கள் அணியினரை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் 20-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதனால் கொரோனா டெஸ்ட் குயின் என பிரீத்தி ஜிந்தாவிற்கு புது பட்டப்பெயரை நெட்டிசன்கள் சூட்டியுள்ளனர்.

அத்துடன் துபாயில் தனது கொரோனா தனிமைப்படுத்தல் அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ள பிரீத்தி ஜிந்தா, ‘‘பலரும் என்னிடம் ஐ.பி.எல். அணிகளுக்கு எப்படி கொரோனா பாதுகாப்பு வழங்கப்படுகிறது எனக் கேட்டிருந்தனர். அத்துடன் என்னுடைய அனுபவத்தையும் கேட்டிருந்தனர். 

நான் 6 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தேன். ஒவ்வொரு 3-4 நாட்களுக்கும் இங்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அறையில் இருந்து வெளியே செல்லக்கூடாது. எங்கள் அணிக்கு என கொடுக்கப்பட்டிருக்கும் உணவகம் மற்றும் உடற்பயிற்சிக்கூடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். எந்த உணவும் வெளியிலிருந்து கொண்டு வரக்கூடாது. வெளியாட்கள் யாருடனும் பழகக்கூடாது.

என்னைப்போன்று சுதந்திரப் பறவையாக இருக்க விரும்புவோருக்கு இது கடினமானதாகும். இருந்தாலும் கொரோனாவிற்கு இடையிலும் ஐபிஎல் நடத்தப்படுகிறது என்பதற்காக பிசிசிஐ மற்றும் மருத்துவக்குழுவினருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து