நாளொன்றுக்கு 6 யூனிட் மது அருந்தும் இங்கிலாந்து மகாராணி

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      உலகம்
Elizabeth 2020 10 24

Source: provided

லண்டன் : இங்கிலாந்து மகாராணி ஒரு நாளைக்கு எவ்வளவு மது அருந்துவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 6 யூனிட் அளவு மதுவை எலிசபெத் மகாராணி குடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.  

கடந்த ஆண்டு இண்டிபெண்டன்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் எந்த வகை மதுவை அருந்துவார் மற்றும் அதன் அளவுகோல் குறித்த விபரங்களை வெளியிட்டது. 

அதன்படி, தினமும் மதிய உணவு வேளைக்கு முன்னர் ஜின் மற்றும் டுபோனெட் ஒயின் மதுவகைகளை ஒன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சை மற்றும் ஐஸ் கட்டிகளை கலந்து குடிப்பார்.  மதிய உணவு உண்ணும் போதே ஒயின் மதுவையும் அருந்துவார் என கூறப்பட்டுள்ளது.

மாலை வேளையில் ஜின் மற்றும் வெர்மவுத் கலந்த கார்ட்டினி (காக்டெய்ல்) மதுவை மகாராணி அருந்துவார். இவை எல்லாவற்றின் அளவை சேர்த்தால் ஒரு நாளைக்கு 6 யூனிட் அளவு மதுவை எலிசபெத் மகாராணி குடிக்கிறார்.

வாரத்துக்கு 40.6 யூனிட் அளவாக இது உள்ளது.சாதாரண குடிமக்கள் வாரத்துக்கு 14 யூனிட் அளவு வரை மட்டுமே மது அருந்த வேண்டும் என்பது இங்கிலாந்து அரசின் அறிவுறுத்தலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து