காங். ஆளும் மாநிலங்களில் வன்கொடுமை நடந்தால் ராகுல் மவுனம் காப்பது ஏன்? - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      இந்தியா
Nirmala-Sitharaman 2020

Source: provided

புதுடெல்லி : காங்.ஆளும் மாநிலங்களில் பாலியல் வன்கொடுமை நடைபெற்றால் ராகுல் காந்தி ஏன் அங்கு செல்வதில்லை? என்றும், எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக் கூடாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த பட்டியலினத்தைச் சேர்ந்த தொழிலாளியின் 6 வயது மகளை அதே பகுதியைச் சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் தமது தாத்தாவுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்றார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பீகாரை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளியின் 6-வயது மகள் ஹோசியார்பூரில்(பஞ்சாப்) பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட  சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. 

அரசியல் ரீதியாக தங்களுக்கு உதவும் வகையில்   பிற இடங்களுக்கு எல்லாம் செல்லும் சகோதரர் மற்றும் சகோதரியின் மனசாட்சியை இந்த சம்பவம் உலுக்கவில்லையா?  ராகுல் காந்தியிடம் இருந்து எந்த ஒரு டுவிட் பதிவும் வெளியாகவில்லை. இந்த சம்பவத்தில் எந்த கொந்தளிப்பும் ஏற்படவில்லை.

எந்த சுற்றுப்பயணமும் இல்லை.  எந்த ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அரசியலாக்கப்படக் கூடாது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்  வன்கொடுமை நடந்தால் காங்கிரஸ் மவுனம் காக்கிறது என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து