மருதுபாண்டியர் குருபூஜையில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த துணை முதலமைச்சருக்கு செக்காணூரணியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு

சனிக்கிழமை, 24 அக்டோபர் 2020      தமிழகம்
TMM 2020 10 24

Source: provided

திருமங்கலம் :  மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமிழக துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு, செக்காணூரணியில் வைத்து தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியில் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் அருள்மிகு.மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவில் பிரசாதம் வழங்கி எழுச்சிமிகு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

தாய்நாட்டின் விடுதலைக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து துணிச்சலுடன் போராடி தங்களது இன்னுயிரை ஈந்து வீரமரணமடைந்த மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை அரசு விழா நேற்று திருப்பத்தூரில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் பங்கேற்று தமிழக அரசின் சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திடுவதற்காக திருப்பத்தூர் சென்றிடும் வழியில் தமிழக துணை முதலமைச்சர், கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் நேற்று காலை மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செக்காணூரணி பகுதிக்கு வருகை புரிந்தார்.அப்போது தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர்,கழக அம்மா பேரவைச் செயலாளர்,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்,சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம்,உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.இதனை தொடர்ந்து துணை முதல்வருக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புத்தகம் கொடுத்து அன்புடன் வரவேற்றார்.

பின்னர் மதுரை அருள்மிகு.மீனாட்சியம்மன் திருக்கோவில் அர்ச்சகர்கள் வேதமந்திரம் முழங்கிட தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்து கோவில் பிரசாதம் வழங்கினார்கள்.பிறகு செக்காணூரணி பகுதி கோவில் பூசாரிகள் சார்பில் துணை முதல்வருக்கு ஆரத்தி எடுத்து வெற்றித் திலகமிட்டு பூரண கும்பமரியாதை செய்தனர்.இதனை தொடர்ந்து செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று கும்பங்களை கையில் ஏந்தியபடி வெற்றிக் குலவையிட்டு துணை முதல்வருக்கு எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர்.இதையடுத்து கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் மற்றும் செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தேவர் சிலை பகுதியில் திரண்டு வந்து மலர்கொத்து கொடுத்தும்,சால்வைகள் கொடுத்தும் துணை முதல்வரை உற்சாகத்துடன் வரவேற்றனர்.தமிழக வருவாய்,பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த எழுச்சிமிகு வரவேற்பு நிகழ்ச்சியினை கண்டு மனம் நெகிழ்ந்த தமிழக துணை முதலமைச்சர்,கழக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அனைவருக்கும் நன்றி தெரிவித்துவிட்டு காரிலேறி திருப்பத்தூரில் நடைபெறுகின்ற மாமன்னர் மருதுபாண்டியர்களின் 219வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்றார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் பா.வெற்றிவேல்,மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன்,மாவட்ட துணை,இணைச் செயலாளர்கள் பஞ்சம்மாள்,பஞ்சவர்ணம்,பொருளாளர் திருப்பதி,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தமிழ்ச்செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் கபிகாசிமாயன், மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் தமிழழகன்,மாவட்ட மீனவரணி செயலாளர் சரவணபாண்டி,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் சதீஷ்சண்முகம்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜஹாங்கீர்,மாவட்ட ஐ.டி.விங் செயலாளர் சிங்கராஜபாண்டியன்,மாவட்ட மகளிரணி செயலாளர் லெட்சுமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பால்பாண்டி,மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் போத்திராஜ்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,ஒன்றிய கழகச் செயலாளர்கள் திருமங்கலம் அன்பழகன்,கள்ளிக்குடி மகாலிங்கம்,கல்லுப்பட்டி ராமசாமி,சேடபட்டி பிச்சைராஜன், உசிலம்பட்டி நகர செயலாளர் பூமாராஜா,அலங்கை ரவிச்சந்திரன்,

யூனியன் சேர்மன்கள் லதாஜெகன்,மீனாட்சி மகாலிங்கம்,சண்முகப்பிரியா பாவடியான்,துணை சேர்மன்கள் வளர்மதி அன்பழகன்,கலையரசி கண்ணன், முனியம்மாள், முன்னாள் துணை சேர்மன்கள் கண்ணன்,பாவடியான்,பேரூர் கழகச் செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணியன், ஐ.டி.விங் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் மதுசூதனன்,இணைச் செயலாளர்கள் ஜெய.சி. செல்வகுமரன்,கீதாலெட்சுமி, ஆனந்த்,கார்த்திக்,மாவட்ட துணைச் செயலாளர்கள் அன்பரசன், ராம்குமார், பசும்பொன்ராஜன், பிரபு, சிவபாலபாண்டியன், பொருளாளர் நவநீதகண்ணன், திருமங்கலம் ஒன்றிய ஐ.டி.விங் செயலாளர் விவேக், நகர் செயலாளர் விஜயகுமார், திருமங்கலம் ஒன்றிய அவைத் தலைவர் அன்னக்கொடி,துணைச் செயலாளர்கள் சுகுமார், சுமதிசாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், ஆண்டிச்சாமி, சிவபிரியா, லட்சுமி, சஞ்சய்காந்தி, வாகை ஆண்டிச்சாமி, கழக வழக்கறிஞர்கள் முத்துராஜா, வெங்கடேஸ்வரன், துரைப்பாண்டி,ராஜசேகர் கட்சி நிர்வாகிகள் அன்னக்கொடி, ஆலம்பட்டி ஜெகன்,செக்காணுரணி பஞ்சாயத்து தலைவர் நர்மதா கபிகாசிமாயன், முன்னாள் உரப்பனூர் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், வெல்டிங் முருகன், கப்பலூர் தீபாஆறுமுகம், ராஜாமணி, பேரவை ஜி.பாண்டி, சிவகுமார், ராஜாமுகமது, ஆனந்த், இளைஞரணி பொன்னமங்கலம் ஜெயமணி,பிரபு,பி.ஆர்.சி.அழகர்சாமி,தளபதிசெல்வா, புங்கங்குளம் ஜெயராமன் மற்றும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட நகர,ஒன்றிய,பேரூர் மற்றும் கிளை கழகநிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து