ஜன. 1- முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் இயங்கும்

திங்கட்கிழமை, 26 அக்டோபர் 2020      தமிழகம்
TN-assembly 2020 10 26

Source: provided

சென்னை : ஜனவரி 1-ம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வாரத்தில் 5 நாட்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள செய்தியில்  கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து, அரசு அலுவலகங்கள் வாரத்திற்கு 6 நாட்கள், அதாவது சனிக்கிழமைகளிலும் இயங்கும் என்று கடந்த மே 15-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், ஒவ்வொரு அலுவலகத்திலும் 50 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று ஆணையிடப்பட்டு இருந்தது.  

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதியில் இருந்து ஒவ்வொரு அலுவலகமும் 100 சதவீத ஊழியர்களுடன் பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அரசாணை கடந்த ஆகஸ்டு 31-ம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது.  இந்த நிலையில், சனிக்கிழமை உள்பட வாரத்தில் 6 நாட்களும் அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அரசு மாற்றியுள்ளது. 

அதன்படி, ஏற்கனவே இருந்த நடைமுறைப்படி, 100 சதவீத பணியாளர்களுடன் 5 வேலை நாட்கள் தற்போதுள்ள நேர அளவின்படி அரசு அலுவலகங்கள் இயங்கும். இந்த உத்தரவு அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 1-ம் தேதியில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து