மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதவாலேவுக்கு கொரோனா

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      இந்தியா
Ramdas-Adavale 2020 10 27

Source: provided

மும்பை : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து