பாக்.கை தளமாக கொண்ட18 பேரை பயங்கரவாதிகளாக இந்தியா அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      இந்தியா
Chota-Shakeel 2020 10 27

Source: provided

புதுடெல்லி : திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மேலும் 18 நபர்களை பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில்  நிறைவேற்றப்பட்ட திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மேலும் 18 நபர்களை பயங்கரவாதிகள் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. 

முன்னதாக 2019 ஆகஸ்டில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு நபரை பயங்கரவாதியாக நியமிக்கும் ஏற்பாட்டை உள்ளடக்கியதாக யு.ஏ.பி.ஏ- சட்டத்தை திருத்தியுள்ளது. இந்த திருத்தத்திற்கு முன்னர், அமைப்புகளை மட்டுமே பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்க முடியும். தற்போது தனிமனிதர்களையும் பயங்கரவாதிகளாக அறிவிக்க முடியும். 

அந்த அடிப்படையில்  மேலும் 18 பேர் பயங்கரவாதிகளாக அறிவிக்கபட்டு உள்ளனர்.  பயங்கரவாதிகளாக நியமிக்கப்பட்டவர்களில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சையத் சலாஹுதீன், இந்திய முஜாஹிதீன் ரியாஸ் மற்றும் இக்பால் பட்கல், தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய உதவியாளர் சோட்டா ஷகீல் ஆகியோர் அடங்குவர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து