திருப்பதியில் நவம்பர் மாதத்திற்கான ரூ. 300 கட்டண தரிசன டிக்கெட் வெளியீடு

செவ்வாய்க்கிழமை, 27 அக்டோபர் 2020      இந்தியா
Tirupati 2020 10 27

Source: provided

திருப்பதி : திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் நவம்பர் மாதத்திற்கான ரூ.300 டிக்கெட்டுகளை நேற்று வெளியிட்டது. 

திருப்பதி தேவஸ்தானம் இணையதள முன்பதிவில் ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.  அதன்படி நவம்பர் மாதத்திற்கான டிக்கெட்டுகளை நேற்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் இணைய தளத்தில் வெளியிட்டது. 

இவற்றை பெற விரும்பும் பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.  தினசரி 16 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வைக்கப்பட்டுள்ளன.  இந்த டிக்கெட்டுகள் வைத்துள்ள பக்தர்கள் மட்டுமே அலிபிரி சோதனைச்சாவடியில் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து