முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் மருத்துவமனையில் தீ : இரண்டு நோயாளிகள் உயிரிழப்பு

புதன்கிழமை, 28 அக்டோபர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

பிரேசில் : பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நோயாளி இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் அதிகமான நோயாளிகள் தீ விபத்துல் இருந்து மீட்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

மருத்துவமனை கட்டிடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ கொளுந்துவிட்டு எரிந்து புகைமூட்டமாக காட்சியளித்தது. தீயணைப்பு படை வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லாரோ போடோ கூறியதாவது:- 

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனை கட்டிடத்தின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. நோயாளிகள் சக்கர நாற்காலிகளிலும் ஊன்றுகோல்கள் உதவியுடன் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். உயிரிழந்த 2 நோயாளிகள் 42 வயது மற்றும் 82 வயது மதிக்கத்தகவர்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து