முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் எந்தவிதத்திலும் தி.மு.க. உரிமை கொண்டாட முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் சூடான பதில்

வெள்ளிக்கிழமை, 30 அக்டோபர் 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : 7.5 சதவீத  இடஒதுக்கீட்டில் தி.மு.க. எந்தவிதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று ஒப்புதல் அளித்தார். 

இதனை தொடர்ந்து கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கவர்னரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். இந்நிலையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் 7.5 சதவீத  உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததற்காக கவர்னருக்கு தமிழக அரசின் சார்பில் முதல்வர்  நன்றி தெரிவித்ததாக கூறினார்.

7.5 சதவீத இடஒதுக்கீடு நடப்பாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த இடஒதுக்கீட்டால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கும் என்றும் கூறினார்.

மேலும் இடஒதுக்கீடு ஒப்புதல் விவகாரத்தில் தி.மு.க. எந்தவிதத்திலும் உரிமை கொண்டாட முடியாது என்று கூறிய அவர், சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதற்காக தனித்தீர்மானம் கொண்டு வந்தாரா? என்றும் கேள்வி எழுப்பினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து